உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது

இரவிலும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ., வங்கி எஸ்.ஐ., ரோந்தால் நகை, பணம் தப்பியது

ஆவடி, ஊழியர்கள் அலட்சியத்தால், ஆவடியில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை கதவு பூட்டப்படாமல், இரவிலும் திறந்தே கிடந்தது. போலீஸ் ரோந்து சென்றதால், வங்கியிலிருந்த பணம், நகைகள் தப்பின.ஆவடி குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி சி.டி.எச்., சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் மரக்கதவு, கிரில் கேட் பூட்டாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார், வங்கி மேலாளர் பூபாலனுக்கு தகவல் கொடுத்தார். பதறியடித்து வந்த மேலாளர் பூபாலன், ஊழியர் சுரேந்தர் ஆகியோர் வங்கிக்கு வந்து ஆய்வு செய்தபோது, திருட்டு போன்ற அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக, வங்கி கதவை பூட்டாமல் சென்றது தெரிய வந்தது. வங்கியில் 3,000த்துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். சம்பவ நாளில் வங்கியில், 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்ததாக கூறப்படுகிறது. வங்கி பூட்டாமல் இருந்ததை, ரோந்து சென்ற எஸ்.ஐ., கவனித்ததால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த பணம், நகை திருடு போகாமல் தப்பின. சிறப்பாக செயல்பட்ட எஸ்.ஐ., சிவகுமாரை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sabesan Umapathy
ஜூன் 06, 2025 21:04

Many banks are not closed even at 11.00PM, bank staffs are harrsed by the bank managers till that time, with the result bank staffs are getting fatigue and do this type of mistakes rarely, for e. g CUB branch in chenmia nager all the staffs and officers do work from moning 9.00 hrs to 11.00 PM at night including female staffs and after that going to their home in a most unsafe manner, if any untoward incident happens then only everyone will wake and find solutions till such time all suffer to the great extent


Radhakrishnan
ஜூன் 06, 2025 19:27

இது சம்பந்தமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் விளக்கம் என்ன என்பதை கேட்டு அறிந்த பிறகே கருத்து எதுவும் தெரிவிக்க இயலும்.


Sitaraman Munisamy
ஜூன் 06, 2025 18:26

கவனக்குறைவாக இருக்கும் வங்கி அலுவலர்களுக்கு என்ன தண்டனை?


Radhakrishnan
ஜூன் 07, 2025 19:54

கண்ணால் காண்பதும் பொய் . காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.


Kalyanaraman
ஜூன் 06, 2025 17:44

தல தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்.


Mahendran Puru
ஜூன் 06, 2025 15:31

அந்த மூன்று கண்டெய்னர் கதை மர்மம் புதைக்கப் பட்டது. இப்போது வங்கிக் கிளை கதவு திறந்து கிடக்கிறது. ஸ்டேட் பேங்க் ஒரு தினுஸுதான்.


R FOR RAJA
ஜூன் 05, 2025 23:28

காவல்துறையின் பணியே இரவு நேரங்களில் ஒன்று செல்வது அதை போலத்தான் அந்த காவல் ஆய்வாளரும் தன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் அவர் பணியை செய்ததற்கு பாராட்டப்படுகிறது என்றால் இது எந்த மாதிரியான நிர்வாகம் ஒன்றும் புரியுற மாதிரி இல்லை


R FOR RAJA
ஜூன் 05, 2025 23:26

காவல்துறையின் பணியே ரோந்து செல்வது தான்...அவர் பணியை செய்தற்கே பாராட்டப்படுகிறார் என்றால்...இந்த நிர்வாகத்தை என்ன சொல்வது...


nanjappa Chetty
ஜூன் 06, 2025 11:17

He must be rewarded for his Alertness and dedication to his duty.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை