மேலும் செய்திகள்
கோ--- கோ போட்டி பரிசளிப்பு விழா
11-Sep-2025
சென்னை; பள்ளிக்கல்வித்துறையின் சென்னை வருவாய் மாவட்ட மாணவியருக்கான எறிபந்து போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கத்தில் நேற்று நிறைவடைந்தது. இதில், 14 வயது பிரிவில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. அடுத்து, வியாசர்பாடி டான்பாஸ்கோ பள்ளி இரண்டாமிடத்தையும், சோழிங்கநல்லுார் செகர் ஹார்ட் பள்ளி மூன்றாம் இடத்தையும், விருகம்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன. அதேபோல், 17 வயது பிரிவில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், கோடம்பாக்கம் ஜெய்கோபால் ஹிந்து பள்ளி இரண்டாமிடத்தையும், சோழிங்கநல்லுார் பினேயல் பள்ளி மூன்றாம் இடத்தையும், அம்பத்துார் பி.கே.ஜி.ஜி., பள்ளி நான்காம் இடத்தையும் வென்றன. இதேபோல், 19 வயது பிரிவில், முகப்பேர் வேலாம்மாள், சோழிங்கநல்லுார் செகர் ஹார்ட், மாதவரம் டாக்டர் சிவந்தி பள்ளி, கோடம்பாக்கம் ஜெய்கோபால் ஹிந்து பள்ளிகள் அணிகள் முறையே, முதல் நான்கு இடங்களை கைப்பற்றின.
11-Sep-2025