உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

போரூர்:படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட மாநகர பேருந்து நடந்துநரை, போரூர் அரசு பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அய்யப்பன்தாங்கல் இருந்து தடம் எண் - 26 மாநகர பேருந்து, ராயபுரம் நோக்கி நேற்று காலை 9:00 மணிக்கு சென்றது. போரூர் சந்திப்பு அருகே சென்றபோது, பேருந்துக்குள் இருந்த போரூர் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் படிக்கட்டில் தொங்கியபடி, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து, பேருந்து நடத்துநர் அல்லா பகாஷ், 52, மாணவர்களிடம் படிக்கட்டில் நிற்காமல் பேருந்துக்குள் மேலே வருமாறு கூறியுள்ளார். அப்போது, நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும், நடத்துநரை கன்னத்தில் கையால் அடித்து, சரமாரியாக தாக்கினர். இதை பயணி ஒருவர், மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூகவலை தளங்களில் வெளியிட்டார். இதையடுத்து, போரூர் சந்திப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம், நடத்துநர் தகவல் தெரிவித்தார். வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். மாணவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !