உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

வண்ணாரப்பேட்டை,ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்ட பழைய குற்றவாளி பிடிபட்டார். பழைய வண்ணாரப்பேட்டை, நரசய்யர் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார், 52. இவர், மே 23ம் தேதி இரவு, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஸ்கூட்டர் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரை, 42, நேற்று கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். தமீம் அன்சாரி மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட 11 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை