உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்

பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்

பெரும்பாக்கம், பெரும்பாக்கம் நேசமணிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, வீட்டு பிளாஸ்டிக் கழிவுகள், காயிலான் கடையால் நிராகரிக்கப்பட்ட பொருட்களை அகற்றும் வகையில், ஆண்டுதோறும் முகாம் நடத்துகின்றன.அந்த வகையில், 'டிரை வேஸ்ட் கலெக்ஷன்' எனும் பெயரிலான இரண்டு நாள் பொருட்கள் சேகரிப்பு முகாம், பெரும்பாக்கம் கம்யூனிட் அரங்கில், இன்று முதல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இதில், பொதுமக்கள் வீடுகளில் உள்ள புத்தகம், கிழிந்த துணிகள், எலக்ட்ரிக் பொருட்கள், தலையணை, மெத்தைகள், பிளாஸ்டிக் கழிவுகள், காலணிகள் உள்ளிட்டவை ஒப்படைக்கலாம்.இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள், மறுசுழற்சி செய்வோரிடம் ஒப்படைக்கப்படும் என, முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை