உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் திருப்பணிக்கு பாதி விலையில் சீத்தலைச்சாத்தனின் புத்தகம் விற்பனை

கோவில் திருப்பணிக்கு பாதி விலையில் சீத்தலைச்சாத்தனின் புத்தகம் விற்பனை

சென்னை: சீத்தலைச்சாத்தன் எழுதிய புத்தகங்கள் புதுக்கோட்டை மாவட்டம் கூழிப்பிறை தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்காக, பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து, எழுத்தாளர் சீத்தலைச்சாத்தன் கூறிய தாவது: புதுக்கோட்டை மாவட்டம், கூழிப்பிறையில் தன் வந்திரி பெருமாள் கற்கோவில் கட்டப்பட்டு வருகிறது. முழுதும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு வரும் கோவில் பணிக்கு நிதி திரட்டும் வகையில், சீத்தலைச்சாத்தன் எழுதிய, 25 புத்தகங்கள் பாதி விலைக்கு விற்கப்பட உள்ளன. குறிப்பாக, தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் ஒன்பது, உணவே மருந்து, பங்குச்சந்தை பல முகங்கள், மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், இறைவனிடம் கையேந்துங்கள், மனிதர்களை படியுங்கள், மோதிப்பார் 'மோடி ஜி' உள்ளிட்ட, 25 புத்தகங்கள் விற்பனையில் உள்ளன. மேலும், உமையாள் ராமனாதனின் ஆங்கில நாவல்களும் கிடைக்கும். கோவில் திருப்பணிக்காக, இப்புத்தகங்கள் அனைத்தும் பாதி விலைக்கு விற்கப்படுகின்றன. புத்தகம் தேவைப்படுவோர், 93858 86315 என்ற எண்ணிற்கு 'ஜிபே, வாட்ஸாப்' வாயிலாக பணம் அனுப்பலாம். கூரியர் கட்டணமாக, கூடுதலாக, 50 ரூபாய் சேர்த்து அனுப்ப வேணடும். இவற்றுடன், அன்னதான சித்தரின் ஆசி உரைகள் புத்தகம், இலவச இணைப்பாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 98424 90447 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ