மேலும் செய்திகள்
மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
18-Oct-2024
சென்னை: சென்னையில் மரவள்ளி கிழங்கு சீசன் களை கட்டத் துவங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, ஆரம்பாக்கம் போன்ற பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை முடிந்து, வியாபாரத்திற்கு வந்துள்ளன. விளைச்சல் அதிகமாக இருப்பதால், செங்குன்றம், மாதவரம் பகுதியில் ஒன்றரை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.வியாபாரி அஜய் கூறுகையில், ''இங்கு சிவப்பு நிறத்தில் உள்ள பர்மா கிழங்கு மற்றும் தமிழ்நாட்டு கிழங்கு என இரண்டு வகையில் மரவள்ளி கிழங்கு அறுவடையாகும். ''பெரும்பாலான கிழங்குகள் கர்நாடகாவுக்கு பால் பவுடர்மற்றும் மைதா தயாரிப்புக்கு ஏற்றுமதியாகும்,'' என்றார்.
18-Oct-2024