உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாட்டிற்கு அனுப்புங்கள் கென்யா பெண் தர்ணா

நாட்டிற்கு அனுப்புங்கள் கென்யா பெண் தர்ணா

சென்னை: நாட்டிற்கு அனுப்பக்கோரி, கென்ய நாட்டு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்தாண்டு சுற்றுலா விசாவில், கென்யாவைச் சேர்ந்த வெர்னிகோ, 24 மற்றும் இரண்டு பேர் இந்தியா வந்தனர். சென்னையிலும் தங்கினர். வெர்னிகோவுடன் வந்த மற்ற இரண்டு பேரும், விசா காலம் முடியும் முன் அவர்களின் நாட்டிற்கு சென்று விட்டனர். ஆனால், வெர்னிகோ மட்டும் தாம்பரம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி உள்ளார். இந்நிலையில், தன்னையும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள, எப்.ஆர்.ஆர்.ஓ., எனும் வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகம் முன், நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இவர் தாம்பரம் பகுதியில் எதற்காக தங்கி இருந்தார். ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து, எப்.ஆர்.ஆர்.ஓ., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, வெர்னிகோவை கென்யாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை