உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா

சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா

சென்னை, சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் சுற்றில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் மோதின. போட்டி துவங்கி இரு அணியும் கோலுக்காக போராடின. ஆனால், இரு அணிகளின் தடுப்பதில் வலுவாக இருந்ததால், கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை. போட்டி முடிவில் இரு அணியும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை