உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் டிவிஷன் கால்பந்து ஐ.சி.எப்., அணி வெற்றி

சீனியர் டிவிஷன் கால்பந்து ஐ.சி.எப்., அணி வெற்றி

சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில், கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில், சென்னை கஸ்டம்ஸ், ஐ.சி.எப்., அணிகள் மோதின. போட்டியின் 14வது நிமிடத்தில், அல்பின் வால்டர் என்ற வீரர், ஐ.சி.எப்., அணிக்காக முதல் கோலை அடித்தார்.அடுத்து 18வது நிமிடத்தில், ஐ.சி.எப்.,பின் ஸ்ரீ குட்டன், இரண்டாவது கோலை அடிக்க. போட்டியின் முதல் பாதியில் 2 - 0 என, ஐ.சி.எப்., முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட, சென்னை கஸ்டம்ஸ் அணிக்கு, 54வது நிமிடத்தில் அஜய் ஒரு கோல் அடித்தார். முடிவில் 2 - 1 என்ற கோல் கணக்கில், ஐ.சி.எப்., அணி, சென்னை கஸ்டம்ஸ் அணியை வீழ்த்தியது.

குளறுபடி

சென்னையில் நேற்று துவங்க இருந்த, முதல் டிவிஷன் போட்டியில், அணிகள் மற்றும் மற்றும் வீரர்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, திட்டமிட்டப்படி மதியம் 2:00 மணிக்கு போட்டி துவங்கவில்லை. போட்டி துவங்கும் தேதி பின் அறிவிக்கப்படும் என, சென்னை கால்பந்து அமைப்பு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி