மேலும் செய்திகள்
மாவட்ட வாலிபால் போட்டி 37 அணிகள் பலப்பரீட்சை
12-Sep-2025
சென்னை சென்னை மண்டலம், சீனியர் மாநில கூடைப்பந்து போட்டியில், மொத்தம் 188 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழக கூடைப்பந்து சங்கம் மற்றும் சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. போட்டியில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட, லயோலா, முகப்பேர் பி.சி., - சென்னை பி.சி., - ஜவகர் நகர், கண்ணதாசன் நகர், ரெயின்போ அகாடமி, மேயர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெண்களில் 56 அணிகளும், ஆண்களில் 132 அணிகளும் என, மொத்தம் 188 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆண்களில், ஐ.சி.எப்., அணி, 71 - 27 என்ற புள்ளி கணக்கில், கிளவ்டு அணியையும், பீட்ஸ் பி.சி., அணி, 76 - 36 என்ற புள்ளி கணக்கில் செயின்ட் பீட்டர்ஸ் அணியையும், அம்பத்துார் பி.சி., அணி, 56 - 36 என்ற கணக்கில், ?????? தோற்கடித்தன. செந்தில் பி.சி., அணி, 47 - 36 என்ற புள்ளி கணக்கில் கோடம்பாக்கம் பி.சி., அணியையும், டால்பின் பி.சி., அணி, 42 - 28 என்ற புள்ளிக் கணக்கில் முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., அணியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
12-Sep-2025