உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்

கொளத்துார், முதல்வரின் கொளத்துார் தொகுதியில், திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரியார் நகர் 3வது குறுக்கு தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு, செம்மண் நிறத்தில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரில் முகம் கழுவினாலே, தொற்று பரவும் அபாயம் உள்ளது.சமீபத்தில் இப்பகுதியில் நடந்த, 'மக்களைத் தேடி பயணம்' செய்த அமைச்சர், மேயர் மற்றும் கவுன்சிலரிடம், பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர். அப்போது, 'ஜெட்ராய்ட் இயந்திரம் வாயிலாக, குழாயில் துளை போட்டு, பிரச்னை சரிசெய்யப்படும்' என்று, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:குடிநீர் குழாய் பதித்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. புதிய குழாய் அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். பெரியார் நகர் பிரதான சாலையில் மட்டுமே குழாயை மாற்றியுள்ளனர். குடியிருப்பு பகுதிக்கு மாற்றவில்லை. இதற்கு தீர்வு காண முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை