தேனாம்பேட்டை மார்க்கெட்டை சூழ்ந்த கழிவுநீர்
சென்னை:தேனாம்பேட்டை மார்கெட் சாலை, எல்டாம்ஸ் சாலை, சாலை மட்டத்தைவிட தாழ்வாக இருப்பதால், தண்ணீர் தேங்கியது. மழைநீருடன், கழிவுநீர் இரு நாட்களாக தேங்கி நிற்பதால், மார்க்கெட் பகுதிக்கு வருவோர், சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பொருட்கள் வாங்க வருவோர் சிரமப்படுகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.