உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஷாலிமர் சிறப்பு ரயில்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு

 ஷாலிமர் சிறப்பு ரயில்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் சிறப்பு ரயில்கள் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  ஷாலிமரில் இருந்து வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் டிச., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது  சென்ட்ரலில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 11:20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி