கடலில் பாய்ந்த கார் துறைமுகத்தில் அதிர்ச்சி
சென்னை, சென்னை, துறைமுகம் ஏழாவது நுழைவு வாயில், ஜி.டி., 5வது பகுதியில் கார் ஒன்று, நேற்று இரவு 9:00 மணி அளவில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக கடலில் பாய்ந்தது.அந்த காரில் இருவர் பயணித்த நிலையில், ஒருவர் காரில் இருந்து தப்பி வெளியேறினார். மயக்கத்தில் இருந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.காருடன் மூழ்கி மாயமான ஓட்டுனரை, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். காரில் பயணித்தவர்கள் அடையாளம் தெரியாததால், அந்த நபர்கள் குறித்து துறைமுகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.