உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வகுப்பறைக்கு பெயின்ட் அடித்த பள்ளி மாணவர்களால் அதிர்ச்சி

வகுப்பறைக்கு பெயின்ட் அடித்த பள்ளி மாணவர்களால் அதிர்ச்சி

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 650க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.சில நாட்களில் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், மாணவர்களிடம் பணம் வசூலித்து, வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க முடிவானது.அதன்படி, மாணவர்களே பெயின்ட் அடிக்க வேண்டும் என, தலைமையாசிரியர் ராஜிவ் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள், ஆபத்தான முறையில், ஜன்னல் மீது ஏறி, பெயின்ட் அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்காமல், வகுப்பறைக்கு பெயின்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
மார் 20, 2025 20:38

இந்தப் புகைப்படத்தில் மாணவர்கள்ஆபத்தான முறையில் நிற்பதாகத் தெரியவில்லை. தக்க பாதுகாப்பு உபகரணங்களின் உதவியோடு மாணவர்கள் வர்ணம் அடித்தால் தவறில்லை.


अप्पावी
மார் 20, 2025 11:12

பெயிண்ட், அடிச்சுக் குடுக்கலாம். என் பள்ளிக்காலத்தில் நாங்கள் பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்திருக்குறோம்.


முக்கிய வீடியோ