உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் ரூ.50 லட்சம் ஆட்டை மோசடி ஊழியர்கள் சிக்கினர்

கடையில் ரூ.50 லட்சம் ஆட்டை மோசடி ஊழியர்கள் சிக்கினர்

திருமுல்லைவாயல்:திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 45. இவர் சி.டி.எச்., சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.திருமுல்லைவாயல், மூர்த்தி நகரைச் சேர்ந்த கதிர்வேல், 38, என்பவர் கடையின் வரவு - செலவு கணக்குகளை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல், வரவு - செலவு கணக்கில் குளறுபடி உள்ளதை, உதயகுமார் கடந்தாண்டு கண்டுபிடித்துள்ளார்.அவர் கடையில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்ததில், கடையில் பணிபுரியும் நஸ்ரின், 25, மதன், 27, அய்யனார், 26, ஆகியோர், பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம், தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி, பின் அதை கதிர்வேலுக்கு அனுப்பியுள்ளனர்.கதிர்வேல், தன் மனைவி தவுலத்பேகம் மற்றும் உறவினர் மோகன்ராஜ் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறு மொத்தமாக, 50 லட்சம் ரூபாய் வரை கதிர்வேல் கையாடல் செய்துள்ளார். இது குறித்து, உதயகுமாரின் மனைவி திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தார்.திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிந்து, கதிர்வேல், மதன், நஸ்ரின் ஆகிய மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை