மேலும் செய்திகள்
சிறுமியிடம் அத்துமீறிய கடைக்காரருக்கு 'போக்சோ'
30-Sep-2025
நன்மங்கலம்: நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் கனி, 45. இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். தாம்பரம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 11 வயது சிறுமியிடம், அவரின் தாய் கடைக்கு சென்று பால் பாகெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், கடைக்கு போக மறுத்த சிறுமி, அழுது கொண்டே, கடைக்கு சென்றால் கடைக்காரர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக, மேடவாக்கம் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சிறுமியிடம் சில்மிஷம் செய்த கடைக்காரர் கனியை கைது செய்தனர். பின், சேலையூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
30-Sep-2025