உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்டெய்னர் லாரி மோதி உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்

கன்டெய்னர் லாரி மோதி உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்

திருவொற்றியூர், கன்டெய்னர் லாரி மோதி சிக்னல் கம்பம் உடைந்து விழுந்ததால், எண்ணுார் விரைவு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை துறைமுகத்தில் இருந்து, கன்டெய்னர் பெட்டியை ஏற்றி கொண்டு, நாப்பளையம் அருகே உள்ள ஒரு தனியார் சரக்கு பெட்டகத்திற்கு செல்வதற்காக, கன்டெய்னர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.எண்ணுார் விரைவு சாலையில், எல்லையம்மன் கோவில் அருகே, ஓட்டுநர் பூவரசன், 28, என்பவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சிக்னல் கம்பத்தில் மோதியது.இதில் சிக்னல் கம்பம் உடைந்து, சாலையில் விழுந்தது. அந்நேரம், வேறு வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இதனால், எண்ணுார் விரைவு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டுநரின் துாக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. எண்ணுார் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ