உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிம்ஸ் மருத்துவமனையில்

சிம்ஸ் மருத்துவமனையில்

சென்னை, அனைத்து வயது பெண்களுக்கும், முழுமையான சுகாதார ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், 'சிம்ஸ் பெண்மை' என்ற மையத்தை, சிம்ஸ் மருத்துவமனை துவக்கியுள்ளது.இந்த மையத்தை, எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலையில், நடிகை ஊர்வசி திறந்து வைத்தார்.இதுகுறித்து, ரவி பச்சமுத்து கூறியதாவது:அனைத்து வயது பெண்களுக்கும் சிறந்த மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை குறிக்கோள் அடிப்படையில், இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. சிம்ஸ் பெண்மை மையம் வாயிலாக, தரமான மருத்துவ சேவையையும், முழுமையான சிகிச்சையும் வழங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி