சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சென்னை,சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணியர் பாதிக்கப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானம், காலையில் 10:30 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்த விமானத்தில் பயணிக்க 217 பேர் இருந்தனர்.குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, பயணியர் விமானத்தில் ஏறினர். விமானம், ஓடுபாதையில் ஓட துவங்கிய போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமான பொறியாளர்கள் குழு, கோளாறு சரிபார்க்கும் முயற்சியில் இறங்கினர். பின், காலை 11:30 மணிக்கு விமானம் சரிசெய்யப்பட்டு, சிங்கப்பூர் புறப்பட்டது.