உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சார் - பதிவாளர் ஆபீசில் ரெய்டு  

 சார் - பதிவாளர் ஆபீசில் ரெய்டு  

அம்பத்துார்: கொன்னுார் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அம்பத்துார் டன்லப் அருகே அம்பத்துார் மற்றும் கொன்னுார் சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், கொன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை 5:30 மணி முதல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 9:30 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 84,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் தான், சிக்கிய ஆவணங்கள் குறித்த முழு விபரம் தெரிய வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ