உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடு முட்டி அக்கா, தம்பி காயம் சென்னையில் தொடரும் அதிர்ச்சி

மாடு முட்டி அக்கா, தம்பி காயம் சென்னையில் தொடரும் அதிர்ச்சி

மாதவரம், சென்னையில் மீண்டும் மாடு முட்டியதில் அக்கா, தம்பி காயமடைந்தனர். மாதவரம், பொன்னியம்மன்மேடு, திருமலை நகர் விரிவு, பொன்னுசாமி நகரில் வசிப்பவர் சசிகுமார்; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு யஷிதா, 9 என்ற மகளும் ரித்திக் ரியோ, 7 என்ற மகனும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம், அக்கா, தம்பி இருவரும், வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த மாடு இருவரையும் முட்டி துாக்கி வீசியதில், பலத்த காயமடைந்தனர். இதை கண்ட பகுதி மக்கள், இருவரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, மாதவரம் காவல் நிலைய போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புழல் -கதிர்வேடு பகுதியில் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழிய ரான சாய்ராம், 61 , என்பவரை அப்பகுதியில் உள்ள மாடு ஒன்று, முட்டி துாக்கி சாலையில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை