மேலும் செய்திகள்
கத்தியுடன் உலா ரவுடிகள் கைது
25-Apr-2025
புளியந்தோப்பு, பெரம்பூர், பி.எச்., சாலையை சேர்ந்தவர் சங்கர், 70. இவரது வீட்டருகே மது போதையில் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரகளை செய்தனர். இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். இதையடுத்து, பெரம்பூரை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற கபாலி, 23 மற்றும் சுரேஷ் பாபு, 21 ஆகிய இருவரை செம்பியம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதேபோல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த ரவுடிகள் தீனா, 42, ஸ்ரீதர், 23 மற்றும் ரமேஷ், 31 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பேசின்பாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பவுடர் மில்ஸ் சாலையில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், ‛அறுப்பு' சங்கர், 40 என்ற ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25-Apr-2025