உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிலீப்பர் வந்தே பாரத் ரயில் மும்பை பயணியர் எதிர்பார்ப்பு

சிலீப்பர் வந்தே பாரத் ரயில் மும்பை பயணியர் எதிர்பார்ப்பு

சென்னை, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில், ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில், சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி, கடந்த ஆண்டு துவங்கியது.சமீபத்தில் இப்பணி முடிந்ததை அடுத்து, அந்த ரயிலை மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது.எனவே, பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே சிலீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு அனுப்பியுள்ள மனு:கடந்த 40 ஆண்டுகளில், சென்னை - மும்பை இடையே, மூன்று தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு நகரங்கள், இந்தியாவில் முக்கிய மெட்ரோ நகரங்களாக உள்ளன.கடந்த 20 ஆண்டுகளில் விரைவான தொழில்மயமாக்கல் காரணமாக, இந்த தடத்தில் பயணியர் தேவை அதிகரித்துள்ளது.எனவே, சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே சிலீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை துவங்க வேண்டும். மேலும், இந்த ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும்.இந்த ரயில், தொழில் துறையின் மையமாக திகழும் ஸ்ரீபெரும்புதுார் பயணியருக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

saravanan
செப் 29, 2024 21:48

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்கினால் முதலில் சென்னை-மும்பை தடத்தில் தொடங்கப்பட வேண்டும் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டர்கள் தொலைவுள்ள இந்த இரு வளரும் தொழில் நகரங்களில் வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான தேவை மிகவும் இன்றியமையாதது. தற்போது இயக்கப்படும் தினசரி விரைவு ரயில்களில் பயணிக்க ஒரு நாள் ஆகிவிடுகிறது. விமான கட்டணங்களோ வழக்கம் போல விண்ணை தொடும் அடிக்கடி பயணிப்போர்க்கு சற்று சிரமம் இதற்கான சிறந்த தீர்வாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டால் பயணியர் அணைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.


புதிய வீடியோ