உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகள் பாதுகாப்பு ஆபீசில் சமூக பணியாளர் பணியிடம்

குழந்தைகள் பாதுகாப்பு ஆபீசில் சமூக பணியாளர் பணியிடம்

சென்னை, தெற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், சிறப்பு சிறார் காவல் பிரிவில், ஓராண்டுக்கு, தொகுப்பூதியத்தில் இரண்டு சமூக பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. 42 வயது மிகாத, சமூகபணி, சமூகவியல் மற்றும் சமூக அறிவியல் இவற்றில் ஏதேனும் ஒன்றில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,536 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்கள், https://chennai.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 15 நாட்களுக்குள், ஆலந்துார், புதுத்தெருவில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ