உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தந்தை குத்திக்கொலை பாசக்கார மகன் கைது

தந்தை குத்திக்கொலை பாசக்கார மகன் கைது

புளியந்தோப்பு, தாயை தவறாக பேசிய தந்தையை குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் பாலு, 50. இவரது மகன் கார்த்திக், 29. நேற்று தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.சிறிது நேரத்தில், கத்தியால் தன்னைத் தானே தந்தை குத்திக் கொண்டார் என, கார்த்திக் கூச்சலிட்டார்.அக்கம் பக்கத்தினரின் உதவியோடு, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தபோது, பாலு இறந்தது உறுதி செய்யப்பட்டது.பேசின்பாலம் போலீசார், கார்த்திக்கிடம் விசாரித்தனர்.அப்போது, 'தன் தாய் மற்றும் மனைவியை மற்ற ஆண்களோடு தொடர்புபடுத்தி தந்தை பாலு பேசினார். இதை தட்டிக் கேட்டேன். ஆனாலும், அவர் தவறாக பேசியதால், ஆத்திரத்தில் அவரை ஹெல்மெட்டால் தாக்கினேன். 'பின் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் இரண்டு முறை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்' என, கார்த்திக் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை