பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம்
சென்னை, : தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க, ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை என்.எஸ்.சி., போஸ் சாலையில், ஏழு தெருக்களில் கடை வைத்துள்ள பட்டாசு வியாபாரிகளுக்கு, தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்கக் கோரி, பட்டாசு வியபாாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு ஒரு வாரத்தில் இடம் ஒதுக்கப்படும் என, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, வியாபாரிகளின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.