மேலும் செய்திகள்
ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்யும் சுதாராணி
13-Oct-2025
சென்னை: வழக்கமான உடல்நல பரிசோதனையை தாண்டி, உடலமைப்பிற்கு ஏற்ப உடலில் உள்ள ரசாயனங்களை கண்டறிவதற்கான பிரத்யேக மையத்தை, அண்ணாநகரில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் துவக்கியுள்ளது. அண்ணாநகர், ஆர்த்தி ஸ்கேனில் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் குறித்த ஆய்வகத்தை, உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சி மற்றும் செயல்பாடு பிரிவு நிபுணர் ஏ.டி.ராஜாமணி நேற்று துவக்கி வைத்தார். இது குறித்து, ஆர்த்தி ஸ்கேன் நிறுவனர் வி.கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண்குமார் கோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது: இம்மையம், வழக்கமான பரிசோதனைகளை தாண்டி, அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ப பரிசோதனையை செய்ய முடியும். அத்துடன், உடலில் உள்ள ரசாயனங்கள், உடலில் செயல்படும் முறை வாயிலாக உடல் வலிமை, உடல் சமநிலை குறித்த மதிப்பீடுகளை கண்டறிய முடியும். குறிப்பாக, ஒருவரின் உடல் எவ்வாறு செயல்படுகிறது. உடலில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப முழுமையான பரிசோதனையை பெற முடியும். குறைந்த கட்டணத்தில், மிக துல்லியமாக நோய்களை கண்டறிய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
13-Oct-2025