உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வருக்கு அனுப்பப்பட்ட ஸ்பீடு போஸ்ட்

முதல்வருக்கு அனுப்பப்பட்ட ஸ்பீடு போஸ்ட்

அம்பத்துார்,கொரட்டூர் ஏரிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டோர், மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்து முதல்வருக்கு 'ஸ்பீடு போஸ்ட்' அனுப்பியுள்ளனர். கொரட்டூர் ஏரி கரையோரமான, கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரில் ஒப்படைவு பட்டாவில் வசித்த 66 குடும்பத்தினர், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்தாண்டு வெளியேற்றப்பட்டனர்.அவர்களுக்கு மாற்று இடம் வழங்க, நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. தற்போது வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.இதனால், அவர்கள் தபால் நிலையத்தில், தங்களது கோரிக்கை மனுவை முதல்வருக்கு 'ஸ்பீடு போஸ்ட்' வாயிலாக அனுப்பினர்.அந்த மனுவில், 'வீடற்ற தங்களுக்கு மாற்று இடம் தற்போது வரை வழங்கப்படவில்லை. 66 குடும்பத்தினரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளோம். மாற்று இடம் வழங்க அரசு முன்வர வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி