உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை- பிரயாக்ராஜ் சேவை பிப்.,ல் துவக்குது ஸ்பைஸ்ஜெட்

சென்னை- பிரயாக்ராஜ் சேவை பிப்.,ல் துவக்குது ஸ்பைஸ்ஜெட்

சென்னை:சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகருக்கு, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், தினசரி விமான சேவையை துவங்க உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா, கடந்த 13ம் தேதி துவங்கிய, பிப்., 26ம் தேதி வரை நடக்கிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட, உலகம் முழுதும் இருந்து பலர் வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து பிரயாக்ராஜுக்கு, வரும் பிப்., 1ம் தேதி முதல் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்குகிறது.சென்னையில் இருந்து தினமும் மாலை 4:00 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6:35 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடையும்.பிரயாக்ராஜில் இருந்து தினமும் பகல் 12:35 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3:25 மணிக்கு சென்னை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !