உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காதுகேளாதோர் டி - 20 கிரிக்கெட் புதுச்சேரி அணி சாம்பியன்

காதுகேளாதோர் டி - 20 கிரிக்கெட் புதுச்சேரி அணி சாம்பியன்

சென்னை, மார்ச் 22-சென்னையில் நடந்த, காது கேளாதோருக்கான தேசிய டி - 20 கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி அணி, 74 ரன்கள் வித்தியாசத்தில், விஜயவாடா அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.'டெப் எனேபில்ட் பவுண்டேஷன்' சார்பில், காதுகேளாதோருக்கான தேசிய கிரிக்கெட் போட்டி, மெரினா கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மதியம் நிறைவடைந்தது.போட்டியில், ஹைதராபாத், புதுச்சேரி, மத்திய பிரதேசத்தின் இந்தோர் மற்றும் ஆந்திராவின் விஜயவாடா ஆகிய நான்கு அணிகள் மோதின. நேற்று காலை நடந்த இறுதிப் போட்டியில், புதுச்சேரி மற்றும் விஜயவாடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 187 ரன்களை எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த, விஜயவாடா அணி, 15 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 74 ரன்கள் வித்தியாசத்தில், புதுச்சேரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு, சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபாலசாமி பரிசுகளை வழங்கினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ