உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஆர்.எம்., மாணவர் குதிரையேற்றத்தில் சாதனை

எஸ்.ஆர்.எம்., மாணவர் குதிரையேற்றத்தில் சாதனை

சென்னை, ஆசிய குதிரையேற்ற கூட்டமைப்பு சார்பில், ஆசிய கோப்பைக்கான குதிரையேற்ற போட்டி, பெங்களூரில் கடந்த 11ல் துவங்கி, 13ம் தேதி வரை நடந்தது.இதில், இந்தியா, பாக்., மலேஷியா உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் மாணவர் சூர்யா ஆதித்யா, ஒட்டுமொத்த போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார். இந்த வெற்றியால், 14 ஆண்டுகளுக்கு பின், நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ