உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென்னிந்திய ஹாக்கி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

தென்னிந்திய ஹாக்கி போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்

சென்னை : --புதுச்சேரியில், தென்னிந்திய அளவில் நடந்த ஹாக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மகளிர் அணி 'சாம்பியன்' கோப்பையை வென்றது. அர்ஜுனா ஹாக்கி கிளப் சார்பில், மகளிருக்கான தென்னிந்திய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, புதுச்சேரியின், கூடப்பாக்கத்தில் நடந்தது. இதில், தென்னிந்திய அளவில் 20 மாநில கல்லுாரி அணிகள் போட்டியிட்டன. போட்டிகள், முதலில் நாக் - அவுட் முறையிலும், அடுத்து லீக் முறையிலும் நடந்தன. நாக் அவுட் சுற்றில் அசத்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, லீக் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது. முதல் லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி, அர்ஜுனா அணிகள் மோதின. இதில், 7 - 1 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது. மேலும் அடுத்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தின் பி.கே.ஆர்., அணியை எதிர்த்து போட்டியிட்டது. போட்டி 5 - 5 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் முடிவில் எஸ்.ஆர்.எம்., அணி ஐந்து புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து, கோப்பையை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில் ஈரோட்டின் பி.கே.ஆர்., அணி உள்ளது. 8 தங்க பதக்கம் தமிழக தடகள சங்கம் மற்றும் செங்கல்பட்டு தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி, செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு திடலில் நடந்தது. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் பங்கேற்ற வீரர் - வீராங்கனையர், எட்டு தங்கம், நான்கு வெண்கலம் என, 12 பதக்கங்களை வென்றனர். இதன் ஆடவர் பிரிவில், அரவிந்தன் மூன்று தங்கம் உட்பட ஒரு மாநில சாதனை, தனுஷ் ஒரு தங்கம், பிரேமானந்த் சுப்பிரமணியம் இரண்டு வெண்கலம், கோகுல்பாண்டி ஒரு வெண்கல பதக்கம் பெற்றனர். பெண்கள் பிரிவில், சாதனா ரவி இரண்டு தங்கம் உட்பட ஒரு மாநில சாதனை, சுபதர்ஷினி இரண்டு தங்கம், சுவேதா ஒரு வெண்கலம் என, மொத்தம் 12 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை