உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொங்கு சுழற்கோப்பை  வென்றது எஸ்.ஆர்.எம்.,

கொங்கு சுழற்கோப்பை  வென்றது எஸ்.ஆர்.எம்.,

சென்னை, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், தமிழக கல்லுாரிகள் இடையிலான, கொங்கு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், தமிழகத்தின் 60க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.ஆண்களுக்கான பேட்மின்டன் இறுதி ஆட்டத்தில் 3 - -2 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., இதே ஆட்டத்தின் பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியை 2 - -1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.கூடைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஆண்கள் அணி முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. டேபிள் டென்னிஸ் போட்டியில், பெண்கள் அணி முதலிடத்தையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை