போக்குவரத்து இடையூறாக குழாய்கள் அடுக்கி வைப்பு
இ.சி.ஆர்., பாலவாக்கம் கடற்கரை சாலையோரம் கழிவுநீர் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. சாலையில் இடையூறாக உள்ளதால், வாகனங்களில் செல்ல முடியவில்லை. நடைபயிற்சி செய்யவும் இடையூறாக உள்ளது.இரவு நேரத்தில் சிலர் குழாய்க்குள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், பெண்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். போக்குவரத்து இடையூறு, அநாகரிக செயலுக்கு காரணமாகும் குழாய்களை இடம் மாற்ற வேண்டும்.- கந்தசாமி, பாலவாக்கம்