உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆறு வார்டுகளில் இன்று விண்ணப்பம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆறு வார்டுகளில் இன்று விண்ணப்பம்

சென்னை:சென்னையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், வரும் 15ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக, ஆறு வார்டுகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, விண்ணப்பம் வழங்கும் பணி, இன்று துவங்குகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள, 25, 38, 76, 109, 143, 168 ஆகிய ஆறு வார்டுகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம், வரும் 15ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக,இன்று இந்த வார்டுகளில், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, விண்ணப்பங்கள் வழங்க உள்ளனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில், தினமும் ஆறு வார்டுகள் வீதம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும். ஒவ்வொரு வார்டிலும், தலா இரண்டு முகாம்கள் வீதம், 15ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை, 400 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, ஆக., 14ம் தேதிக்குள், 109 வார்டுகளில் முகாம் நடத்தப்படும். முகாம் குறித்த விபரங்கள், விண்ணப்பம் வழங்கும் பணியில், 2,000 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.முகாம் நடைபெறும் தேதியில் இருந்து, 7 நாட்களுக்கு முன், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, தகவல் தெரிவித்து விண்ணப்பம் வழங்குவர். இதில், 13 அரசு துறைகள் வழியாக கிடைக்கும், 43 சேவைகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.அதில், தகுதிவாய்ந்த நபர்களுக்கு விண்ணப்பம் வழங்கி, தேவையான ஆவணங்கள் வைக்க ஆலோசனை வழங்கப்படும். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.விண்ணப்பங்கள் மீது, 45 நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !