வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னதான் 70 வருட கட்சியா இருந்து, பலமுறை தமிழ் நாட்டை ஆட்சி செய்திருந்தாலும் இன்னமும் பிரியாணியும், quarterum கொடுத்துதான் ஆள் சேர்க்க வேண்டி இருக்கிறது. ஐயோ பாவம்.
சென்னை, புளியந்தோப்பில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேநேரம் வேளச்சேரியில் நடந்த முகாமில், அலுவலர்களுக்கு 'பிரியாணி'யும், மக்களுக்கு 'லெமன் சாதம், புளி சாதம், தயிர்சாதம்' என, விதவிதமான உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் 72வது வார்டுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், புளியந்தோப்பு சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத் தொகை மற்றும் பட்டா கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் திண்டாடினர். பந்தல், நாற்காலி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால், மனு கொடுக்க வந்த மக்கள் வெயிலில் தவித்தனர். முகாமை பார்வையிட வந்த, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சரியான முன்னேற்பாடுகள் செய்யாதது ஏன் என, அதிகாரிகளை கடிந்து கொண்டார். தேவையான வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டார். Advertisementhttps://www.youtube.com/embed/fWWb5XBQdUcவிருந்து மாநகராட்சியின் 177 வது வார்டான வேளச்சேரியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில், 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில், 13 துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் உட்பட, 350 பேர் இருந்தனர். இவர்களுக்கான டிபன், மதிய உணவு, டீ, பிஸ்கெட் உள்ளிட்டவை சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும். நேற்று நடந்த முகாமில், டிபன், டீ, பிஸ்கெட் சுகாதாரத்துறை வழங்கியது. மதியத்தில், வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன், ஊழியர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கினார். மனுவுடன் காத்திருந்த பொதுமக்களுக்கு, புளிசாதம், லெமன் சாதம், தயிர் சாதம் வழங்கினார். மகனை தொலைத்த தாய் குன்றத்துாரில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மகளிர் உரிமை தொகை கோரி மனு கொடுக்க வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில், 3 வயது மகனை தவறவிட்டார். அந்த சிறுவன் தாயை தேடி, அழுதுகொண்டே அங்கும் இங்கும் திரிந்தான். முகாமில், அதிகாரிகள் இருந்த பகுதிக்கு, சிறுவன் அழுதபடியே வருவதை கவனித்த நகராட்சி கமிஷனர் ராணி, சிறுவனை அழைத்து, துாக்கி வைத்தபடி, 'அம்மா எங்கே' என கேட்டார். சிறுவனுக்கு சொல்ல தெரியாமல் தொடர்ந்து அழுது கொண்ட இருந்தான். இதையடுத்து, மைக் மூலம் சிறுவனின் அடையாளங்களை கூறி, அம்மாவை தேடினர். சிறுவனின் தாய் பதறி அடித்தபடி வந்து, மகனை அழைத்து சென்றார். இச்சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
என்னதான் 70 வருட கட்சியா இருந்து, பலமுறை தமிழ் நாட்டை ஆட்சி செய்திருந்தாலும் இன்னமும் பிரியாணியும், quarterum கொடுத்துதான் ஆள் சேர்க்க வேண்டி இருக்கிறது. ஐயோ பாவம்.