மேலும் செய்திகள்
மாநில ஜூனியர் கூடைப்பந்து 41 அணிகள் பலப்பரீசை
08-Jun-2025
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
சென்னை, மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில், ஜவகர் நகர் அணி, 86 - 54 என்ற கணக்கில், மேயர் ஆர்.எம்., அணியை தோற்கடித்தது.மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.இப்போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஜேப்பியார் பல்கலை, லயோலா உள்ளிட்ட ஆண்களில் 34 அணிகள், பெண்களில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன.ஆண்களுக்கு, 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில், பெண்களுக்கு 'நாக் அவுட்' முறையிலும் போட்டிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆடவருக்கான ஆட்டத்தில், வேளச்சேரி வாரியஸ், 43 - 27 என்ற கணக்கில், எச்.டி.எப்., டிவிஸ்டர் அணியையும், நாகம் பி.சி., அணி, 78 - 63 என்ற கணக்கில் வேலம்மாள் அணியையும் தோற்கடித்தன.அடுத்தடுத்த போட்டிகளில், ஏசஸ் பி.சி., அணி, 71 - 37 என்ற கணக்கில் இந்துஸ்தான் அணியையும், ஜவகர் நகர் அணி, 86 - 54 என்ற கணக்கில் மேயர் ஆர்.எம்., அணியையும் வீழ்த்தின.எழும்பூர் புல்ஸ் அணி, 63 - 60 என்ற கணக்கில், எம்.எம்., அணியையும், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் அணி, 79 - 31 என்ற கணக்கில் ஜோதிமணி அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.போட்டிகள் தொடர்கின்றன.
08-Jun-2025
06-Jun-2025