மேலும் செய்திகள்
கோலமிட்டு அபார்ட்மென்ட் வாசகியர் மாயாஜாலம்!
05-Jan-2026
சென்னை: தமிழ்நாடு மாநில கேரம் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கேரம் சங்கம் சார்பில், மாநில கேரம் போட்டி நாகர்கோவிலில் நடந்தது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட கேடட் பிரிவில், சிறுவரில் சென்னையைச் சேர்ந்த ஆன் ட்ரூ பால் 10, லக் ஷன் 10, சிறுமியரில் விழுப்புரம் மித்ரா 10, சாதனா, 11 ஆகியோர், முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். சப் - ஜூனியரில் விழுப்புரம் கோகுலேஷ் 13, சென்னை சகுந்தன், 13 ஆகியோர் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். அதேபோல், சீனியர் தரவரிசை போட்டியில், ஆண்களில் சென்னை அப்துல் ஆசிப் 23, அருண் கார்த்திக் 26, முதல் இரண்டு இடங்களை வென்றனர். பெண்களில் நாமக்கல் பிரிதா பிரின்சி 17, சென்னை ஹரணி 18 ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அனைத்து பிரிவிலும் சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியரே அதிக இடங்களை கைப்பற்றி அசத்தினர்.
05-Jan-2026