உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 20ல் பம்மலில் மாநில செஸ்

வரும் 20ல் பம்மலில் மாநில செஸ்

சென்னை, பம்மலில், இம்மாதம் 20ல் துவங்கும் மாநில செஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனந்தன் செஸ் அகாடமி சார்பில், நான்காவது மாநில அளவிலான செஸ் போட்டி, பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமியில், இம்மாதம் 20ம் தேதி நடக்கிறது.இதில், 8, 11, 13 மற்றும் 25 வயது பிரிவுகளில் தனித்தனியாக இருபாலருக்கும், 'சுவிஸ்' அடிப்படையில், 'பிடே' விதிப்படி, போட்டிகள் நடக்கின்றன.ஒவ்வொரு போட்டியில் முதலிடத்தை பிடிப்போருக்கு, செஸ் விளையாட்டிற்கு பயன்படுத்தும் கடிகாரம் பரிசாக வழங்கப்படுகிறது.போட்டி தொடர்பான விபரங்களுக்கு, 97102 86934 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை