உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில அளவிலான தடகள போட்டி எஸ்.டி.ஏ.டி., வீரர் - வீராங்கனையர் அபாரம்

மாநில அளவிலான தடகள போட்டி எஸ்.டி.ஏ.டி., வீரர் - வீராங்கனையர் அபாரம்

சென்னை: மாநில அளவிலான தடகளப் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., வீரர் - வீராங்கனையர் பல்வேறு பிரிவு போட்டிகளில், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தினர்.தமிழ்நாடு தடகள சங்கம்சார்பில், முதலாவது மாநில அளவிலான தடகளப் போட்டி, பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.இதில், மண்டலம் - 2 உட்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.ஒரு நாள் மட்டும் நடந்த இப்போட்டியில், பல்வேறு ஓட்டப்பந்தயங்கள், நீளம், உயரம் தாண்டுதல், வட்டு, குண்டு எறிதல் என, இரு பாலருக்கும் 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் ஓபன் முறையிலும் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், எல்சடாய் அகாடமி வீரர் ஹரிஷ், போட்டியின் துாரத்தை 21:77 நிமிடத்தில் கடந்து, முதல் இடத்தை பிடித்தார்.இரண்டாம் இடத்தை பர்பாமென்ஸ் அகாடமி வீரர் மனோஜ் 21:78 நிமிடத்தில் கடந்து கைப்பற்றினார்.ஆடவருக்கான 20 வயதுக்குட்பட்ட 400 மீட்டர் ஓட்டத்தில், எஸ்.டி.ஏ.டி., வீரர் கோகுல் பாண்டி, 49:80 நிமிடத்தில் கடந்து, முதலிடத்தை பிடித்தார்.அதேபோல், 20 வயதுக்குட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில், எஸ்.டி.ஏ.டி., வீரர் ரவி பிரகாஷ், 14.64 மீட்டர் தாண்டி முதலிடத்தை பிடித்தார். எஸ்.டி.ஏ.டி., வீரர் அகேஷ்குமார், 14.24 மீட்டர்தாண்டி இரண்டாம் இடத்தை பிடித்தார்.பெண்களுக்கான ஓபன் 400 மீட்டர் ஓட்டத்தில், ஸ்வேதாஸ்ரீ முதல் இடத்தையும், யுகாந்தி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.அதேபோல், 18 வயதுக்குட்பட்டோர் 400 மீட்டர் ஓட்டத்தில், இன்ஸ்பிரேயர் அகாடமி வர்ஷா முதல் இடத்தையும், திவ்யோதா இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.பெண்களுக்கான 18 வயது நீளம் தாண்டுதலில், எஸ்.டி.ஏ.டி., வீராங்கனை சாதனா, 12.23 மீட்டர் தாண்டி முதலிடத்தையும், மலை ஸ்போர்ட்ஸ் அகாடமி அஸ்வினி 10.57 மீட்டர் துாரம் தாண்டி, இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.மும்முறை தாண்டுதலில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், எஸ்.டி.ஏ.டி., வீராங்கனை யமுனா 11.29 மீட்டர் தாண்டி முதல் இடத்தை பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை