உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில வாலிபால் போட்டி: சென்னை அணி முதலிடம்

மாநில வாலிபால் போட்டி: சென்னை அணி முதலிடம்

நாமக்கல்:நாமக்கல் அடுத்த துாசூரில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டியில், சென்னை அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.நாமக்கல் அடுத்த துாசூரில், இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது. 27வது ஆண்டாக, கடந்த 14, 15ம் தேதி இரவு வாலிபால் போட்டி நடந்தது. அதில், சென்னை போலீஸ் அணி, ரயில்வே, பஞ்சாப், கேரளா அணிகளில் விளையாடி வரும் வீராங்கனையரும் பங்கேற்றனர்.தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடிய போட்டியில், சென்னை ஜே.பி.ஆர்., அணி முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் 25,000 ரூபாய் பரிசு பெற்றது. இரண்டாம் இடம் பொள்ளாச்சி பி.கே.ஆர்., அணியும், மூன்றாமிடம் சென்னை பனிமலர் அணியும் பிடித்தது.நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழக இணைச்செயலர் கனகராஜ் கூறியதாவது:நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள துாசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 27ம் ஆண்டாக நடப்பாண்டு கைப்பந்து போட்டியுடன் கபடி போட்டியும் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை