மாநில பெண்கள் கிரிக்கெட் எஸ்.ஆர்.எம்., பல்கலை தங்கம்
சென்னை:மீனம்பாக்கம், ஏ.எம்., ஜெயின் கல்லுாரியில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டி, கடந்த 21ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் ஏராளமான அணிகள் பங்கேற்று மோதின.முதல் லீக் சுற்றில், குருநானக் கல்லுாரி, 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 151 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, எஸ்.ஆர்.எம்., அணி, 18 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 152 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது லீக் சுற்றில், எஸ்.ஆர்.எம்., அணி, ஜேப்பியார் கல்லுாரியுடன் மோதி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில், எத்திராஜ் மற்றும் எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த, எஸ்.ஆர்.எம்., அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 146 ரன்களை அடித்தது.அடுத்து பேட்டிங் செய்த, எத்திராஜ் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 140 ரன்கள் மட்டுமே அடித்து, ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.அனைத்து போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும், எத்திராஜ் அணி இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.