மேலும் செய்திகள்
விமான நிலைய 2வது சர்வதேச முனைய பணிகள் இழுவை
03-Feb-2025
பெருங்களத்துார்,பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, 234 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- - தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022, செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.அடுத்த கட்டமாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, சீனி வாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் முடிந்து, 2023, ஜூனில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமாக பணிகளும் முடிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.மூன்று மார்க்கத்திலுமான பாதைகள் திறக்கப்பட்டதால், பெருங்களத்துாரில் நெரிசல் குறைந்துள்ளது.அடுத்ததாக, நெடுங்குன்றம் மார்க்கமான பாதை மட்டுமே உள்ளது. இப்பாதை அமையவுள்ள இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானது. இதற்கான அனுமதியை வனத்துறை வழங்கியுள்ளது.மற்றொரு புறம், மேம்பாலப் பாதை இறங்கும் இடத்தில், துணைமின் நிலையம் உள்ளது. அதை மாற்று இடத்தில் அமைக்க, மின் வாரியத்திற்கு 23 கோடி ரூபாயை, 2024, மார்ச் மாதம், நெடுஞ்சாலைத் துறை செலுத்தியது.இதையடுத்து, துணை மின் நிலையத்தை அகற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. துணைமின் நிலையத்திற்கு வரும் இணைப்பு, இரணியம்மன் கோவில் அருகேயுள்ள மற்றொரு துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.பெருங்களத்துார், நேதாஜி தெருவில் புதிதாக துணைமின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணி முடிய, எட்டு மாதங்கள் ஆகும்.அது முடிந்தவுடன், இரணியம்மன் கோவில் அருகேயுள்ள துணைமின் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள இணைப்பு, புதிய துணை மின் நிலையத்திற்கு மாற்றப்படும்.துணைமின் நிலையத்தை அகற்றும் பணி முடிந்து, அடுத்த பத்து நாட்களில் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின், அங்கு மேம்பால பணிகள் துவங்கும் என, தெரிகிறது.
03-Feb-2025