மேலும் செய்திகள்
ரூ.98 லட்சம் மோசடி சேலம் நபர் சிக்கினார்
20-Oct-2024
ஆவடி, ஆவடி அடுத்த, மிட்னமல்லி, சி.ஆர்.பி.எப்., நகரைச் சேர்ந்தவர் மலர், 35. இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா, 43, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இவர், 'ஆன்லைன் டிரேடிங்'கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 15,000 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என, மலரிடம் ஆசை வார்த்தை கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.அதேபோல், 2023 முதல் மே 2024 வரை, அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேரிடம் என, மொத்தம் 63 லட்சம் ரூபாய் முதலீடு பெற்ற பத்மபிரியா, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து, ஜூன் 14ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், மலர் புகார் அளித்தார். புகாரின்படி விசாரித்த இன்ஸ்பெக்டர் கோபிநாத், பத்மபிரியாவை நேற்று கைது செய்தார்.
20-Oct-2024