உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிறுத்தப்பட்ட திருப்பதி பஸ் ஆவடி பயணியர் அவதி

நிறுத்தப்பட்ட திருப்பதி பஸ் ஆவடி பயணியர் அவதி

ஆவடி, ஆவடி - திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை வேண்டும் என்ற 10 ஆண்டு கோரிக்கைக்கு பின், கடந்த 2021 செப்டம்பர் மாதம் முதல் தடம் எண்: 201 அரசு பேருந்து சேவை துவக்கப்பட்டது.தினமும் நான்கு நடையுடன் இயக்கப்பட்ட இந்த பேருந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.இதனால், ஆவடி சுற்றுவட்டார பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி செல்லும் பயணியர், ஆவடியில் இருந்து 22 கி.மீ., துாரம் பயணித்து மாதவரம் மற்றும் 23 கி.மீ., பயணித்து திருவள்ளூர் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல, இரவு வேளைகளில் கடைசி பேருந்தில் திருப்பதியில் இருந்து வரும் ஆவடிவாசிகள், திருவள்ளூர், மாதவரம் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்ல போதிய நகரப் பேருந்துகள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வேண்டும்.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் சிவசங்கர், ஆவடியில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !