உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மழைநீர் வடிகால் துார்வார உத்தரவு

 மழைநீர் வடிகால் துார்வார உத்தரவு

சென்னை: பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க, தேவையான முன்னேற்பாடுகளை, மாநகராட்சி செய்யும். இந்நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது: பருவமழையை எதிர்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் தற்போது இருந்தே முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக, மழைநீர் வடிகால்களை துார்வாருதல், வடிகால் கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை சீரமைப்பதுடன், அவற்றின் கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை