கரை ஒதுங்கிய குழாய்கள் கடலில் புதைப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக, கடலில் புதைக்கப்பட்டிருந்த 1.5 கி.மீ., நீளம் உள்ள குழாய்கள், கடந்த 1ம் தேதி கரை ஒதுங்கின. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லும் தொழில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, குடிநீர் வாரியத்தினர், கரை ஒதுங்கிய ராட்சத குழாய்களை, பொக்லைன், கிரேன் இயந்திரங்கள் வாயிலாக கடலுக்குள் இழுத்து சென்று, நேற்று புதைத்தனர். இடம்: நெம்மேலி, மாமல்லபுரம்.