உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குளத்தில் மூழ்கி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

கண்ணகி நகர்: நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கி குளித்த பள்ளி மாணவர், நீரில் மூழ்கி பலியானார். கண்ணகி நகர், 12வது குறுக்கு தெருவை சேர்ந்த எல்லப்பன் மகன் நந்தகோபால், 14. துரைப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, கண்ணகி நகர் மயானம் அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத அவர், ஆழமான பகுதியில் இறங்கியபோது, நீரில் மூழ்கி பலியானார். கண்ணகி நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ